டி20 போட்டியில் முதல் விக்கெட்: நடராஜனுக்கு குவியும் பாராட்டுக்கள்!

Natarajan
டி20 போட்டியில் முதல் விக்கெட்: நடராஜனுக்கு குவியும் பாராட்டுக்கள்!
siva| Last Updated: வெள்ளி, 4 டிசம்பர் 2020 (17:12 IST)
இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் நிலையில் சமீபத்தில் முடிந்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை இழந்தது

இந்த நிலையில் இன்று இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்துள்ளது. இதனை அடுத்து 162 ரன்கள் என்ற இலக்கை நோக்கி தற்போது ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது

இந்த நிலையில் இன்றைய போட்டியில் முதல் முதலாக டி20 சர்வதேச டி20 போட்டியில் களமிறங்கியுள்ள நடராஜன் 11வது ஓவரில் அதிரடி பேட்ஸ்மேன் மாக்ஸ்வெல் விக்கெட்டை எல்.பிடபிள்யூ முறையில் வீழ்த்தினார். இதனை அடுத்து அவர் டி20 கிரிக்கெட் போட்டியில் எடுத்த முதல் விக்கெட் இதுவென்பது குறிப்பிடத்தக்கது அதுமட்டுமின்றி சற்றுமுன் ஷார்ட் விக்கெட்டையும் நடராஜன் எடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சமீபத்தில் விளையாடிய நடராஜன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி பாராட்டுகளைப் பெற்ற நிலையில் தற்போது டி20 போட்டியில் தனது 2 விக்கெட்டுகளை இதுவரை வீழ்த்தியுள்ளார். இதனை அடுத்து நடராஜனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது


இதில் மேலும் படிக்கவும் :