பல பெண்களுடன் தொடர்பு: பிரபல இந்திய கிரிக்கெட் வீரரின் மனைவி பகீர் குற்றச்சாட்டு

MOhammed Shami
Last Updated: புதன், 7 மார்ச் 2018 (13:19 IST)
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளதாக அவரது மனைவி கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் மனைவி ஹஸின் ஜஹான் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தனது கணவர் குறித்து பகீர் குற்றச்சாட்டை கூறியுள்ளார். அவர் கூறியதாவது:-
 
ஷமியின் நடவடிக்கைகள் கொடூரமானவை. அவர் பல பெண்களுடன் உறவு வைத்துள்ளார். ஷமி மற்றும் அவரது குடும்பத்தினர் இரண்டு வருடங்களுக்கு மேலாக தன்னை உடல் ரீதியாகவும், மன் ரீதியாகவும் துன்புறுத்தி வருவதாக கூறியுள்ளார். ஷமி தென் ஆப்பிரிக்கவில் இருந்து திரும்பிய போது என்னை அடிக்க தொடங்கினார். 
 
எனது குடும்பம் மற்றும் மகள் காரணமாக என்னை நானே சமாதானப்படுத்த முயன்றேன். ஆனால் ஷமி பல பெண்களுடன் பேசி வருவதை தெரிந்தபோது சகித்துக்கொள்ள முடியாமல் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க முடிவு செய்தேன் என்று கூறியுள்ளார்,
 
ஹஸின் ஜஹானின் குற்றச்சாட்டுக்கு முகமது ஷமி இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :