தொடர்புடைய செய்திகள்
- ரோஹித் ஷர்மா ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும்… கங்குலி அறிவுரை!
- இந்தியாவால் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு ரூ.869 கோடி இழப்பு.. ஜெய்ஷா வைத்த ஆப்பு..!
- சாம்பியன்ஸ் கோப்பை நடத்தியதால் 860 கோடி ரூபாய் நஷ்டமா…சிக்கலில் பாகிஸ்தான் வாரியம்!
- பாகிஸ்தான் ராணுவம் மீது தற்கொலைப்படை தாக்குதல்! பலுச் விடுதலை படையால் அடுத்தடுத்து அதிர்ச்சி!
- சில நேரம் நான் என் வீரர்களைத் திட்டிவிடுவேன்… நாங்க சகோதரர்கள் –கேப்டன் ரோஹித் ஷர்மா கருத்து!
சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு 58 கோடி ரூபாய் பரிசறிவித்த பிசிசிஐ!
நடந்து முடிந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரை வென்று இந்திய அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்த தொடர் முழுவதும் தோல்வியே சந்திக்காமல் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த தொடரை வென்ற இந்திய அணிக்கு ஐசிசி 12 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக அறிவித்தது.
இந்நிலையில் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் பரிசுத் தொகையாக சுமார் 58 கோடி ரூபாய் அறிவித்துள்ளது. இந்தத் தொகையை வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அணியின் இதர ஊழியர்கள் பிரித்தெடுத்துக் கொள்ள உள்ளனர்.
ஆனால் தொடரை நடத்திய வகையில் பாகிஸ்தான் அணிக்கு அந்நாட்டு மதிப்பில் சுமார் 869 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கு நஷ்ட ஈடாக ஐசிசி வெறும் 52 கோடி ரூபாய்தான் அளித்துள்ளது. இதனால் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் மிகப்பெரிய அளவில் பொருளாதார இழப்பை சந்தித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்