தாயகம் திரும்புகிறார் மிட்செல் மார்ஷ்.. ஆஸ்திரேலியா அணிக்கு பின்னடைவா?
ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரரான மிட்செல் மார்ஷ் திடீரென தாயகம் திரும்ப இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளதை அடுத்து ஆஸ்திரேலியா அணிக்கு பின்னடைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் ஆஸ்திரேலியா தற்போது புள்ளி பட்டியலில் படிப்படியாக முன்னேறி மூன்றாவது இடத்தில் உள்ளது. இன்னும் இரண்டு போட்டிகளில் அந்த அணி வெற்றி பெற்று விட்டால் அரையிறுதிக்கு தகுதி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஆன மிட்செல் மார்ஷ் திடீரென தனிப்பட்ட காரணங்களுக்காக தாயகம் திரும்பவுள்ளதாக அறிவித்துள்ளார். நடப்பு உலக கோப்பை தொடரில் மிட்செல் மிக அபாரமாக விளையாடி வரும் நிலையில் அவர் அணிக்கு திரும்புவாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
அவருக்கான மாற்று வீரர் குறித்த அறிவிப்பை இன்று ஆஸ்திரேலியா அணி வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மிட்செல் மார்ஷ் அணியில் இல்லாததால் ஆஸ்திரேலியா அணிக்கு பின்னடைவா? என்பது நாளை மறுநாள் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடும் போது தான் தெரிய வரும்.
Edited by Mahendran