திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 1 நவம்பர் 2023 (15:06 IST)

நியூசிலாந்து - தென்னாப்பிரிக்கா உலகக்கோப்பை போட்டி.. இரு அணிகளில் என்னென்ன மாற்றம்?

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது

 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று முக்கிய போட்டியாக தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில்  நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து தற்போது தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் செய்து வருகிறது.  இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமான போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்றைய போட்டியில்  தென் ஆப்பிரிக்கா அணியில் ரபாடா இணைந்துள்ளார்,  அவருக்கு பதிலாக  அணியில் இருந்து சம்ஸி நீக்கப்பட்டுள்ளார்.  அதேபோல் நியூசிலாந்து அணியில் ஃபெர்குசன் நீக்கப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக டிம் செளத்தி அணியில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  இரு அணிகளிலும் வேறு எந்த மாற்றமும் இல்லை.

இந்த நிலையில் சற்றுமுன் வரை  தென் ஆப்பிரிக்கா அணி 15 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 61 ரன்கள் எடுத்துள்ளது.  புள்ளி பட்டியலில் தென் ஆப்பிரிக்க அணி இரண்டாவது இடத்திலும் நியூசிலாந்து அணி மூன்றாவது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றுவிட்டால் இந்தியாவை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்தை பிடித்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran