வியாழன், 2 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 1 நவம்பர் 2023 (17:56 IST)

2034 கால்பந்து உலகக் கோப்பை நடத்தும் நாடு! வெளியான தகவல்

உலகில் உள்ள விளையாட்டுகளில் அதிக ரசிகர்களைக் கொண்ட விளையாட்டு கால்பந்து தான். கால்பந்து போட்டிக்கு உலகின் பல்வேறு நாடுகளிலும்  தனியார் நிறுவன கிளப்புகள் உள்ளன. இந்த கிளப் அணிகளுக்கு இடையிலான போட்டியைக் காண நேரிலும், தொலைக்காட்சிகளும் ரசிகர்கள் ஆர்வம் செலுத்துவர்.

இந்த நிலையில், பிபா  உலகக் கோப்பை போட்டிகள் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வரும் நிலையில்,  சமீபத்தில் உலகக் கோப்பை முடிந்தது. இதில், மெஸ்ஸி தலைமையில் அர்ஜென்டினா கோப்பை வென்றது.

அடுத்து, 23 வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2026 ஆம் ஆண்டு அமெரிக்கா,மெக்சிகோம், கனடா ஆகிய நாடுகளில் நடக்கிறது.  2030 ஆண்டு போட்டியை மொராக்கோ, ஸ்பெயின், போர்ச்சுக்கல் இணைந்து நடத்துகிறது.

இதைத்தொடர்ந்து, 2034 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியை ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா ஆகிய நாடுகள்  நடத்தவுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், இப்போட்டியை நடத்துவதற்கு உரிமம் பெறும் முயற்சியில் இருந்து ஆஸ்திரேலியா சம்மேளம் விலகியது. எனவே 2034 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியை சவுதி அரேபியா நடத்துவது உறுதியாகியுள்ளது.