செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 30 அக்டோபர் 2023 (15:08 IST)

இங்கிலாந்து சொதப்பலுக்கு இதுதான் காரணம்… அக்தர் கருத்து!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தோற்றதன் மூலம் 6 போட்டிகளில் ஐந்தைத் தோற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது இங்கிலாந்து அணி.

உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்னர் அரையிறுதிக்கு செல்லும் அணிகளில் ஒன்றாக அனைத்து முன்னாள் வீரர்களும் கருதிய அணிகளில் ஒன்றாக இங்கிலாந்து அணி கருதப்பட்டது. ஆனால் தொடர் தொடங்கியதும் தொடர்ந்து சொதப்பி வருகிறது.

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் தோல்விக்கு முக்கியக் காரணம் அந்த அணியினர் பேஸ்பால் அனுகுமுறைதான் காரணம் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் “இங்கிலாந்து அணி டி 20 பாணியிலான ஆட்டத்தை ஒருநாள் போட்டியிலும் கொண்டுவர முயற்சி செய்கிறார்கள்.  அவர்களிடம் எந்த திட்டமும் இல்லை.  டெஸ்ட் போட்டிகளில் பேஸ்பால் அனுகுமுறை சரியாக இருக்கலாம். ஆனால் ஒருநாள் போட்டிகளில் அது சரிவராது” எனக் கூறியுள்ளார்.