திங்கள், 8 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் இன்று கும்பாபிஷேகம்.. குவியும் பக்தர்கள்..!

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் இன்று கும்பாபிஷேகம்.. குவியும் பக்தர்கள்..!
உலகப் புகழ்பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், இன்று கும்பாபிஷேகம் நடைபெற்று வருகிறது.  இதனை அடுத்து, நேற்று இரவு முதலே மின்னொளியில் கோயில் வளாகம் ஜொலித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
17 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இந்த கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து இருக்கிறார்கள்.
 
நூற்றுக்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை முழங்க, தற்போது கும்பாபிஷேகத்தின் பணிகள் நடைபெற்று வருவதாகவும், கோபுர கலசங்களில் புனித நீர் தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
இந்த கும்பாபிஷேகத்தை காண தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து இருக்கிறார்கள் என்பதும், கும்பாபிஷேகத்திற்கு வரும் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Edited by Siva