திங்கள், 8 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 8 டிசம்பர் 2025 (08:24 IST)

அண்ணாமலை - ஓபிஎஸ் திடீர் சந்திப்பு.. பாஜகவில் சேருகிறாரா?

அண்ணாமலை - ஓபிஎஸ் திடீர் சந்திப்பு.. பாஜகவில் சேருகிறாரா?
முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள், முன்னாள் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை சந்தித்துப் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னாள் ஓ. பன்னீர்செல்வம் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்த நிலையில், அவர் பா.ஜ.க.வில் இணைவார் அல்லது தனிக்கட்சி ஆரம்பித்து தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
 
இந்த நிலையில், 'அ.தி.மு.க. தொண்டர்கள் மீட்புக் குழு' என்ற அமைப்பை வைத்துள்ள ஓ. பன்னீர்செல்வம் அவர்கள், கோவையில் நடந்த தனது அமைப்பின் செயலாளர் மோகன்ராஜ் என்பவரது இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டார்.
 
அதே திருமண விழாவிற்கு அண்ணாமலையும் வந்திருந்தார். இதனை அடுத்து இருவரும் சந்தித்து கொண்டதாகவும், சில நிமிடங்கள் பேசியதாகவும் தெரிகிறது.
 
இரு தரப்பிலும் அரசியல் பேசவில்லை என்று கூறப்பட்டாலும், கண்டிப்பாக அரசியல் பேசி இருப்பார்கள் என்றும், பா.ஜ.க.வில் ஓ.பி.எஸ். இணைவது குறித்து ஆலோசித்திருக்கலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது.
 
Edited by Siva