ஐபிஎல்- 2022; ஹைதராபாத் அணி 170 ரன்கள் வெற்றி இலக்கு !
15 வது ஐபிஎல் தொடர் தற்போது நடந்து வருகிறது. இதில், 10 அணிகள் விளையாடி வருகின்றன.
இ ந் நிலையில் இன்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணிக்கு எதிராக சன் ரைஸ் ஹைதராபாத் அணி விளையாடி வருகிறது.
இன்றைய போட்டியில் முதலில் டாஸ் வென்ற சர் ரைஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பவுலிங் தேர்வு செய்தார்.
எனவே கே .எல்.ராகுல் தலைமையியான லக்னோ அணி தொடக்கத்தில் 17 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் இழந்து திணறியது.
இருப்பினும் கேப்டன் ராகுல் நிதானமாக ஆடி 68 ரன்களும், பண்டே 11 ரன்களும், ஹூடா 51 ரன்களும், படோனி 19 ரன்களும், அடித்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். எனவே 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு அணி 169 ரன் கள் அடித்து, ஹைதராபாத் அணிக்கு 170 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.