ஐபிஎல்-2020; டெல்லி அணிக்கு இமாலய இலக்கு...ஷிகர் தவான் ஏமாற்றம்

Sinoj| Last Updated: செவ்வாய், 27 அக்டோபர் 2020 (22:22 IST)

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 47வது போட்டியில் டெல்லி மற்றும் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. சற்று முன்னர் இந்த போட்டியின் டாஸ் போடப்பட்ட நிலையில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதில் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணியினர் இரு விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் அடித்து, டெல்லிக்கு 221 ரன்கள் இலக்காக நிர்ணயித்தனர்.

இதையடுத்து விளையாடிய டெல்லி
அணியின் தடுப்புச் சுவராக இருந்த ஷிகர் தவான் ஹைதராபாத் அணியின் சந்தீப் சர்மா வீசிய முதல் ஓவரின் ரன்கள் எதுவுமின்றி டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். இதனால் அடுத்து வரும் வீரர்களின் கையில் ஆட்டம் உள்ளது.

புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள டெல்லி அணியும் ஏழாவது இடத்தில் உள்ள ஹைதராபாத் அணியும் மோதுகின்றன என்பதும், இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணி ஐதராபாத் அணி வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு ஓரளவு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கதுஇதில் மேலும் படிக்கவும் :