வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 19 அக்டோபர் 2020 (23:09 IST)

ஐபிஎல்-2020; சென்னை கிங்ஸ் படுதோல்வி...7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி

இன்று நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 37 வது போட்டியில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் ராஜஸ்தான் அணி 7 வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியில் சற்று முன்னர் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமான போட்டி என்பதால் இரண்டு அணிகளும் இந்த போட்டியில் வெற்றிபெற தீவிரமாக முயற்சிக்கும் என்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்று கூறப்பட்ட நிலையில் சென்னை அணியினர் 5 விக்கெட் இழப்பிற்கு 20 ஓவர் முடிவில் 125 ரன்கள் எடுத்து, ராஜஸ்தான் அணிக்கு 126 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.

இதையடுத்து விளையாடிய ராஜஸ்தான் பேட்டிங்கில் அபாரமாக விளையாடி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இறுதிவரை அவுட்டாகாமல் விளையாடி ஸ்டீவ் ஸ்மித் 34 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். ஜோஸ் பட்லர் 48 பந்துகளில் 70 ரன்கள் எடுத்தார்.

சென்னை தரப்பில் தீபர் சாஹர் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ஜோஸ் ஹோசில்வுட் 1 விக்கெட் கைப்பற்றினார்.