செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 23 அக்டோபர் 2020 (22:40 IST)

சென்னை கிங்ஸ் அணி படுதோல்வி….மும்பை அணி விக்கெட் இழப்பின்றி ஜோரான வெற்றி !

சென்னை அணி மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இன்று மீண்டும் மோதவுள்ளதால் மேலும் பரபரப்பு கூடியுள்ளது.இன்று 7:30 மணிக்குத் தொடங்கவுள்ள போட்டியில் மும்பை அணி டாஸ் வென்று பந்துவீச்சுத்


இந்நிலையில், இன்று இரவு 7:30மணிக்கு தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் பேட்டிங் தேர்வு செய்தது.

இதில் தொடக்கம் முதலே சிறப்பாக பேட்டிங் செய்யாத சென்னை அணி வீரர்கள் மளமளவென அவுட்டாகினர்.

பின்னர் சென்னை அணி 29 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்து, 115 ரன்களை மும்பை அணிக்கு இலக்கான நிர்ணயித்துள்ளது.

பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட சென்னை அணி சொற்ப ரன்களே எடுத்துள்ளதால் பீல்டிங் பவுலிங்கிலாவது அசத்துமா என்று ரசிகர்கள் ஆவலாக இருந்தனர்.

சென்னை அணி வீரர்கள் தங்களால் இயன்ற வரை முயற்சி செய்தனர், ஆனால் தோனி முன்னரே கணித்ததுபோல் வாய்ப்பு கிடைத்தும் இளைஞர்கள் ஸ்பார்க் இல்லாதது போலவே நடந்துகொண்டதாக விமர்சனம் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் விக்கெட் இழப்பின்றி மும்பை அணி  115 ரன்கள் என்ற இலக்கை எட்டிப் பிடித்து 10விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதனால் சென்னை பிளே ஆப் சுற்றுகு தகுதி பெறவில்லை.