திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2020
Written By Sinoj
Last Modified: வியாழன், 15 அக்டோபர் 2020 (19:59 IST)

விஜய்யின் படங்களைப் பார்த்துவிடுவேன்…ஐபிஎல் வீரரின் ருசிகர் தகவல்…டுவிட்டரில் டிரெண்டிங்…

கொல்கத்தா அணிக்கு எதிராக தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி சுழற்பந்து வீசி வருகிறார். இவர் சமீபத்தில் சென்னை அணியின் தோனியின் விக்கெட்-ஐ வீழ்த்தி அனைவரின் கவனத்தை  ஈர்த்தார்.

இந்நிலையில், வருண் சக்கரவர்த்தி உள்ளிட்ட சில கொல்கத்தா அணி வீரர்களின் புகைப்படத்தை அந்த அணி நிர்வாகம் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.

அதில், வருண் சக்கரவர்த்தி தனது கையில் விஜய்யின் தலைவா பட டாட்டூ இடம்பெற்றுள்ளது.  இதனால் விஜய் ரசிகர்கள் இதை டிரண்டிங் செய்து வருகின்றனர்.விஜய்யின் படங்களை முதல்நாளே பார்த்துவிடுவேன் என்று வருண் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.