1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated: புதன், 25 ஜனவரி 2023 (08:01 IST)

முத்தரப்பு மகளிர் 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி 2-வது வெற்றி!

indian women
இந்தியா தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய மூன்று நாடுகளின் முத்தரப்பு மகளிர் கிரிக்கெட் டி20 போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.
 
இந்த தொடரில் இந்தியா ஏற்கனவே தென்னாப்பிரிக்கா அணியை வென்றுள்ள நிலையில் நேற்று மேற்கு இந்திய தீவுகள் அணியையும் வென்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
நேற்றைய இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்து இரண்டு விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய வீராங்கனை ஸ்மிருதி வந்தனா 74 ரன்கள் அடித்திருந்தார் 
 
இதனை அடுத்து 168 என்ற இலக்கை நோக்கி விளையாடிய மேற்கின் தீவுகளின் மகளிர் அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதனை அடுத்து முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் நான்கு புள்ளிகளுடன் முதல் இடத்திலும் தென்னாப்பிரிக்க அணி 2 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.
 
Edited by Siva