புதன், 13 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 24 ஜனவரி 2023 (09:36 IST)

பெண்கள் ஐ.பி.எல். போட்டி.. ரூ.4000 கோடி வருமானம் பெறும் பிசிசிஐ!

Women IPL
ஆண்கள் ஐபிஎல் போட்டிகள் கடந்த 15 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டு முதல் பெண்கள் ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 
 
இந்த நிலையில் பெண்கள் ஐபிஎல் அணிகளை வாங்குவதற்கு முன்னணி நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருவதாகவும் ஒரு அணிக்கு 500 கோடி முதல் 800 கோடி வரை தருவதற்கு நிறுவனங்கள் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
பெண்கள் ஐபிஎல் அணிகளை வாங்குவதற்கு ரூபாய் 5 லட்சம் அளித்து 10 முன்னணி நிறுவனங்கள் விண்ணப்பம் பெற்றுள்ளதாகவும் நாளை பெண்கள் ஐபிஎல் அணிகளின் உரிமைகளை வாங்கும் நிறுவனங்கள் யார் யார் என்று தெரிந்துவிடும் என்று கூறப்படுகிறது. 
 
பெண்கள் ஐபிஎல் கிரிக்கெட் மூலம் பிசிஐக்கு ரூபாய் 4000 கோடி வருவாய் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆண்கள் ஐபிஎல் போட்டி போலவே பெண்கள் ஐபிஎல் போட்டியும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெரும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதால் பெண்கள் ஐபிஎல் அணியை வாங்குவதற்கு முன்னணி நிறுவனங்கள் முன்வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva