திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 24 ஜனவரி 2023 (07:51 IST)

இன்று 3வது ஒருநாள் போட்டி.. நியூசிலாந்துக்கு ஆறுதல் வெற்றியா? ஒயிட்வாஷா?

newz vs ind
இன்று 3வது ஒருநாள் போட்டி.. நியூசிலாந்துக்கு ஆறுதல் வெற்றியா? ஒயிட்வாஷா?
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 18ஆம் தேதி நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்திலும் கடந்த 21ஆம் தேதி நடந்த இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் எட்டு விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா வென்றது. 
 
இதனை அடுத்து இன்று இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தூரில் நடைபெற உள்ளது. பகல் இரவு போட்டியாக நடைபெற உள்ள இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் நியூசிலாந்து ஒயிட் வாஷ் ஆகிவிடும் என்பதும் நியூசிலாந்து வெற்றி பெற்றால் அந்த அணிக்கு ஆறுதல் வெற்றி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்திய அணியில் இன்றைய போட்டியில் எந்த விதமான மாற்றமும் இருக்காது என்று கூறப்படுகிறது. 
 
Edited by Siva