செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Updated : ஞாயிறு, 24 செப்டம்பர் 2017 (21:19 IST)

பாண்டியா ஆடிய ருத்ரதாண்டவம்: இந்தியாவுக்கு மூன்றாவது வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி இன்று இந்தூரில் 3வது ஒருநாள் போட்டியில் அந்த அணியுடன் மோதியது. டாஸ் வென்ற ஆஸ்திரெலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. வார்னர், பின்ச், கேப்டன் ஸ்மித் ஆகியோர் அபாரமான ஒப்பனிங்கை கொடுத்தாலும் அடுத்தடுத்து விக்கெட்டுக்கள் வீழ்ந்ததா ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 293 ரன்கள் அடித்தது. பின்ச் 124 ரன்களும் ஸ்மித் 63 ரன்களும் எடுத்தனர்.



 
 
294 என்ற இமாலய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா மற்றும் ரஹானே நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். ரோஹித் சர்மா 71 ரன்களும் ரஹானே 70 ரன்களும் அடித்ததால் வெற்றி இலக்கை நோக்கி இந்திய வீரர்கள் விரைந்தனர். இந்த நிலையில் கேப்டன் விராத் கோஹ்லி 28 ரன்களில் அவுட் ஆனாலும் பாண்டியா ருத்ரதாண்டவம் ஆடினார். அவர் 72 பந்துகளில் 78 ரன்கள் எடுத்து இந்தியாவை வெற்றிக்கு மிக அருகில் கொண்டு சென்றார். இறுதியில் இந்திய அணி 47.5 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 294 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
 
இந்த வெற்றியின் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றதோடு, ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடமும் பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 4வது ஒருநாள் போட்டி வரும் 28ஆம் தேதி பெங்களூரில் நடைபெறவுள்ளது.