1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : சனி, 23 செப்டம்பர் 2017 (12:21 IST)

மின்னலாக மாறிய தோனி; ரசிகர்கள் கொண்டாடும் வைரல் வீடியோ

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தோனி மின்னல் வேகத்தில் ஸ்டெம்பிங் செய்த வீடியோவை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


 

 
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி இலங்கைக்கு எதிராக நடைபெற்ற தொடரை தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிகளிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். தோனியின் விக்கெட் கீப்பிங் ஸ்டைலுக்கு உலக முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். மின்னல் வேகத்தில் செயல்படுவது அவரது தனி திறமை.
 
நேற்று முன்தினம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் அச்சுறுத்தலாக இருந்த மெக்ஸ்வேல் விக்கெட்டை வீழ்த்தி இந்திய  அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். அவரது மின்னல் வேக ஸ்டெம்பிங் அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்துவிட்டது.
 
தற்போது அவர் மின்னல் வேகத்தில் ஸ்டெம்பிங் செய்த வீடியோ வைரலகி உள்ளது. மேலும் ரசிகர்கள் அந்த வீடியோவை சமூக வலைதங்களில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர். இந்திய அணிக்கு தோனி தேவையா என்ற கேள்வி கேட்டவர்களுக்கு, தொடர்ச்சியாக அவரது சிறப்பான ஆட்டம் பதிலடி கொடுத்து வருகிறது.