திங்கள், 6 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : ஞாயிறு, 24 செப்டம்பர் 2017 (17:50 IST)

நெருக்கடியில் இந்திய அணி: 294 ரன்கள் இலக்கு

இந்தூரரில் நடைபெறும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு 294 ரன்கள் இலக்கு வைத்துள்ளது.




 

 
இந்தூரில் இன்று ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய அணிகளிடையே மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி ரன்கள் குவிப்பில் கவனம் செலுத்தியது.
 
பின்ச் சதம் அடித்து அசத்தினார். கேப்டன் ஸ்மித் தனது பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதன்பின் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ஸ்டோனிஸ் கடைசி கட்டத்தில் அடித்து ஆடினார். 50 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 293 ரன்கள் குவித்துள்ளது.
 
இந்திய அணி 294 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாட உள்ளது. இந்த போட்டியிலும் இந்திய அணி வெற்றிப்பெற்றால் ஒருநாள் போட்டி தொடரை வென்றுவிடும்.