செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : ஞாயிறு, 24 செப்டம்பர் 2017 (15:29 IST)

நிதானமான அடித்து ஆடும் ஆஸ்திரேலியா

மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து கொண்டிருக்கும் ஆஸ்திரேலிய அணி நிதானமாக அடித்து விளையாடி வருகிறது.


 

 
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி மூன்றாவது ஒருநாள் போட்டியில் தற்போது விளையாடி வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதல் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 25 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் குவித்துள்ளது.
 
முதல் இரண்டு போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவிடம் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியிலும் இந்திய அணி வெற்றிப்பெற்றால் ஒருநாள் தொடரை கைப்பற்றும். ஆஸ்திரேலிய அணி இரண்டாவது பேட்டிங் செய்யும் இந்திய அணிக்கு ரன்களில் நெருக்கடி கொடுக்க முடிவு செய்து தற்போது வேகமாக ரன்கள் குவிப்பில் ஈடுப்பட்டுள்ளனர். இனி விக்கெட் இழக்காமல் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தால் கட்டாயம் 300 ரன்களை கடக்கும்.