1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 23 செப்டம்பர் 2017 (16:49 IST)

இந்திய அணிக்கு இரு கேப்டன்; இதுவே வெற்றிக்கு காரணம்: வார்னர் வருத்தம்!!

இந்திய அணிக்கு இரு கேப்டகள் உள்ளதாகவும் இதுதான் இவர்களது வெற்றிக்கு பெரும்பாலும் உதவுதாகவும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் வார்னர் தெரிவித்துள்ளார்.


 

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணி ஐந்து ஒருநாள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில் இதுவரை நடைபெற்ற இரண்டு ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. 
 
தற்போது இந்திய அணி ஐசிசி தரவரிசையில் நம்பர்-1 இடத்துக்கு முன்னேறி உள்ளது. இது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் வார்னர் மிகவும் வருத்ததுடன் பேசியுள்ளார்.
 
அவர் கூறியதாவது, தோனி சர்வதேச கேப்டன்களில் மிக சிறந்தவர். அவர் அனுபவம் தற்போதைய இந்திய கேப்டன் கோலிக்கு கிடைத்த ஜாக்பாட். 

நெருக்கடியான நேரத்தில், கோலிக்கு தானாக முன்வந்து தோனி உதவுகிறார். அதனால் இந்திய அணி எப்படிப்பட்ட நிலையையும் அசால்ட்டாக சமாளித்துவிடுகிறது என கூறியுள்ளார்.