1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 20 ஆகஸ்ட் 2018 (06:59 IST)

292 ரன்கள் முன்னிலை: இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு

இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்ததால் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. இந்த நிலையில் கடந்த 18ஆம் தேதி ஆரம்பித்த 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 329 ரன்கள் எடுத்தது. 
 
இந்த நிலையில் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி இந்திய பவுலர்களின் அதிரடி பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 161 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 31 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரே 33 ரன்களுடனும், கேப்டன் விராத் கோஹ்லி 8 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.
 
இந்திய அணி தற்போது 292 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இன்னும் 8 விக்கெட்டுக்கள் கைவசம் இருக்கும் நிலையில் ஆட்டம் இன்னும் மூன்று நாட்கள் மீதமிருப்பதால் இந்திய அணி வெற்றி பெற பிரகாசமான வாய்ப்பு உள்ளது