முதல் இன்னிங்ஸில் 300 ரன்களை கடந்த இந்தியா
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதல் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 329 ரன்கள் குவித்து ஆல் ஆவுட்டானது.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 329 ரன்கள் குவித்து ஆல் ஆவுட்டானது. இதைத்தொடர்ந்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியுள்ளது.
இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் இங்கிலாந்து அணி விரைவாக கட்டுப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து அணியை 300 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினால் மட்டுமே இந்திய அணி இந்த டெஸ்ட் போட்டியில் எளிதாக வெல்ல வாய்ப்புள்ளது.