1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 19 ஆகஸ்ட் 2018 (16:15 IST)

16 ஆண்டுகளுக்கு பிறகு 150 ரன்கள் குவித்த கோஹ்லி- ரஹானே ஜோடி

இங்கிலாந்து மண்ணில் 16 ஆண்டுகளுக்கு நேற்று தொடங்கிய மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கோஹ்லி - ரஹானே ஜோடி 150 ரன்கள் குவித்தது.

 
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான 3வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச முடிவு செய்தது அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கியது.
 
தொடக்க வீரர்களான தவான், ராகுல் வழக்கம் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். புஜாரா 14 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து கோஹ்லி - ரஹானே ஜோடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டது. இந்த ஜோடி 159 ரன்கள் குவித்தது.
 
இருவரும் சதம் அடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரஹானே 81 ரன்களில் வெளியேறினார். கோஹ்லி 97 ரன்களில் வெளியேறினார். இங்கிலாந்து மண்ணில் 16 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஜோடி 150 ரன்களை கடந்துள்ளது. 
 
இதற்கு 2002ஆம் ஆண்டு  சஞ்சய் பங்கர் - டிராவிட் ஜோடி 170 ரன்களை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.