1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. ICC accepts for changes in test and one day match

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிரடி மாற்றங்கள்: ஐசிசி ஒப்புதல்!!

டெஸ்ட்
நியூசிலாந்தின் ஆக்லாந்தில் இன்று ஐசிசி கூட்டம் நடைபெற்றது. இதில் சர்வதேச கிரிக்கெட்டில் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்துள்ளனர்.


 
 
பல ஆண்டுகளாக பரிசீலிக்கப்பட்டு வந்த டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான உலக சாம்பியன்ஷிப் தொடர் மற்றும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான நீண்டகால லீக் தொடரை நடத்த ஐசிசி ஒப்புதல் அளித்துள்ளது.
 
டெஸ்ட் சாம்பியன்ஷிப் லீக் தொடர் இரண்டு ஆண்டுகள் நடைபெறும். இதில், 9 அணிகள் தலா 6 டெஸ்ட் தொடர்கள் விளையாடும். 
 
இந்த ஆறு தொடர்களில் மூன்று தொடர்கள் உள்நாட்டிலும் மூன்று தொடர்கள் அயல்நாட்டிலும் நடக்கும். முதல் லீக் தொடர் 2019 முதல் 2021 வரை நடைபெறும். 
 
இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம் ஆகிய அணிகள் இந்த டெஸ்ட் லீகில் பங்குபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
இந்தியாவில் கிரிக்கெட் நடத்த தடை: பாகிஸ்தான் மும்முரம்!!