1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Updated : வெள்ளி, 13 அக்டோபர் 2017 (11:57 IST)

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் போட்டி: புகழேந்தி அறிவிப்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் டிசம்பர் 31க்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.



இந்த தொகுதிக்கு ஏற்கனவே கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் வாக்காளர்களுக்கு அதிக அளவு தினகரன் உள்ளிட்ட வேட்பாளர்கள் பணம் கொடுப்பதாக எழுந்த புகாரினை அடுத்து தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

எனவே தேர்தல் ரத்து செய்யப்பட்டு ஆறு மாதங்கள் முடிந்துள்ள நிலையில் விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது. இந்த நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் மீண்டும் போட்டியிடுவார் என்று கர்நாடக மாநில அ.தி.மு.க. அம்மா அணி செயலாளர் புகழேந்தி சற்றுமுன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் தேர்தல் ஆணைய விசாரணைக்கு பிறகு இரட்டை இலை சின்னம் தினகரனுக்கே கிடைக்கும் என்றும் ஆர்கே தேர்தலில் வெற்றி பெற்று தினகரன் முதல்வராக பதவியேற்பார் என்றும் அவர் தெரிவித்தார்.