திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Sasikala
Last Modified: வியாழன், 12 அக்டோபர் 2017 (18:11 IST)

பிக்பாஸ் போட்டியாளரின் தற்கொலை முயற்சி; வைரலாகும் கடிதம்

இந்தி பிக்பாஸ் 11வது சீசன் போட்டியாளர் சப்னா சவுத்ரி தற்கொலை செய்ய முயன்றதற்கு முன்பு எழுதிய கடிதம் சமூக  வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


 
 
இந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சி 11வது சீசன் நடந்து கொண்டிருக்கிறது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் நடிகர் சல்மான் கான்  பிக்பாஸ் வீட்டில் இருந்த போட்டியாளர் ஜுபைர் கான் கெட்ட வார்த்தை பேசியதற்காக அவரை, சல்மான் கான் திட்டியதால் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு ஜுபைர் பிக்பாஸ் வீட்டில் இருந்து  வெளியேற்றப்பட்டார்.
 
இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக 12 சாதாரண ஆட்களும், 6 சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள சாதாரண போட்டியாளர்களில் சப்னா சவுத்ரியும் ஒருவர். ஹரியானாவை சேர்ந்த நடனக்  கலைஞர். சப்னாவை அறிமுகம் செய்து வைத்தபோது சல்மான் அவருடன் சேர்ந்து நடனம் ஆடினார். அப்போது சப்னா, தான்  ஒருமுறை தற்கொலைக்கு முயன்றதாக சல்மானிடம் தெரிவித்தார்.
 
சப்னா சவுத்ரி தற்கொலைக்கு முயற்சி செய்ததற்கு முன்பு கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அந்த கடிதம் தற்போது  வெளியாகி வைரலாகியுள்ளது.