1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 13 அக்டோபர் 2017 (10:38 IST)

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது வேஸ்ட்: விஜயகாந்த்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின்னர் கடந்த ஒரு ஆண்டாக ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படாமல் இருக்கும் நிலையில் வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் ஆர்கே நகரில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது


 


இந்த நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே இருப்பதால் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகியுள்ளது. இந்த நிலையில் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடாது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் கூறியுள்ளார். ஏனெனில் தமிழகத்தில் மீண்டும் பொதுத்தேர்தல் விரைவில் வரும்  வாய்ப்பு இருப்பதால் ஆர்கே நகர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றாலும் அது வேஸ்ட் என்று அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக டெங்கு குறித்து விஜயகாந்த் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தார். அங்கு டெங்குவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடம் நலம் விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.