நீண்ட இடைவெளிக்கு பின் தமிழ் தலைவாஸ் அணிக்கு ஒரு வெற்றி

Last Modified திங்கள், 7 அக்டோபர் 2019 (21:43 IST)
புரோ கபடி தொடரில் கடந்த பல போட்டிகளாக தோல்வி அடைந்து வந்த தமிழ் தலைவாஸ் அணி, இன்று ஜெய்ப்பூர் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றுள்ளது

இன்று நடைபெற்ற போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே இரு அணிகளும் புள்ளிகளை மாறி மாறி பெற்று வந்த நிலையில் இறுதியில் தமிழ் தலைவாஸ் அணி 35 புள்ளிகளும், ஜெய்ப்பூர் அணி 33 புள்ளிகளும் பெற்றதால் தமிழ் தலைவாஸ் அணி 2 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இருப்பினும் புள்ளிப்பட்டியலில் அந்த அணி கடைசி இடத்தில்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

முன்னதாக நடைபெற்ற குஜராத் மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் குஜராத் அணி 48 புள்ளிகளும், தெலுங்கு டைட்டன்ஸ் அணி 38 புள்ளிகளும், பெற்றதை அடுத்து குஜராத் அணி 10 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

இந்த நிலையில் இன்றைய போட்டிகளின் முடிவுக்கு பின் டெல்லி, பெங்கால், ஹரியானா, உபி மற்றும் மும்பை ஆகிய அணிகள் முதல் ஐந்து இடங்களில் உள்ளது


இதில் மேலும் படிக்கவும் :