வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 29 டிசம்பர் 2019 (13:31 IST)

தோனிக்கு ரசிகர்கள் தந்த கௌரவம் – ஐசிசி அறிவிப்பு !

ஐசிசி எழுப்பிய கடந்த 10 ஆண்டுகளின் சிறந்த கேப்டன் யார் என்ற கேள்விக்கு அதிகளவிலான ரசிகர்கள் தோனி என்ற பதிலை அளித்துள்ளனர்.

இன்னும் சில நாட்ஜளில் 2019 ஆம் ஆண்டு முடிய இருக்கிறது. இதையடுத்து இந்த தசாப்தத்தின் (2010- 2019)  சிறந்த பேட்ஸ்மேன் யார், பவுலர் யார் என்ற கேள்விகள், கணக்கெடுப்புகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இந்த தசாப்தத்தின் சிறந்த கேப்டன் யார் என்ற கேள்வியை ஐசிசி தனது டிவிட்டர் தளத்தில் எழுப்பியது. இதற்கு ரசிகர்கள் பலரும் கோஹ்லி, கேன் வில்லியம்ஸன், தோனி எனப் பல கருத்துகளைத் தெரிவிக்க அதன் முடிவை ஐசிசி வெளியிட்டுள்ளது.

கணக்கெடுப்பின் முடிவில் தோனிதான் இந்த பதிற்றாண்டின் சிறந்த கேப்டன் எனத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தோனியின் தலைமையில் இந்திய அணி 2007 டி 20 உலகக்கோப்பை, 2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை, 2014 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை மற்றும் டெஸ்ட் அரங்கில் நம்பர் 1 அந்தஸ்து ஆகிய சாதனைகளைப் படைத்தது குறிப்பிடத்தகக்து.