ஆசிய லெவன் vs உலக லெவன் – பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் விளையாடுவார்களா ?

Last Modified வெள்ளி, 27 டிசம்பர் 2019 (08:49 IST)
வங்கதேசத்தில் நடக்கும் ஆசிய லெவன் மற்றும் உலக லெவன் அணிகளுக்ககு இடையேயான போட்டியில் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களோடு சேர்ந்து விளையாடுவதால் என்பது குறித்து பிசிசிஐ செயலர் கருத்து தெரிவித்துள்ளார்.

வங்காளதேசத்தின் தேசத்தந்தை என புகழப்படும் முஜிபூர் ரஹ்மான் நினைவை ஒட்டி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 18 மற்றும் 21 ஆகிய தேதிகளில் உலக லெவன் மற்றும் ஆசிய லெவன் அணிகளுக்கு இடையிலான டி20 போட்டிகள் நடக்க இருக்கின்றன. இந்தப் போட்டிகளில் பங்கேற்க இந்தியாவின் சார்பில் 5 வீரர்களை அனுப்ப பிசிசிஐ ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால் ஆசியா லெவன் அணியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களோடு சேர்ந்து விளையாட வேண்டிய சூழல் இருப்பதால் இப்போது இந்திய வீரர்கள் ஆசிரியர் அணியில் விளையாடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பாலக்கோடு தாக்குதலுக்குப் பிறகு இருநாட்டு அரசியல் உறவும் சரியாக இல்லாததால் அந்நாட்டு வீரர்களோடு சேர்ந்து விளையாடுவதில் இந்தியாவிற்கு தயக்கம் இருப்பதாக தெரிகிறது. இது குறித்து கருத்து ’தெரிவித்துள்ள பிசிசிஐ செயலாளர் ஜெயேஷ் ஜார்ஜ் ஆசிய லெவன் போட்டியில் பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் விளையாடுவதற்கு சாத்தியங்கள் இல்லை. பிசிசிஐ தலைவர் கங்குலி வங்கதேச வாரியத்திடம் விவாதித்து முடிவுகளை அறிவிப்பார்’ எனத் தெரிவித்துள்ளார்.



இதில் மேலும் படிக்கவும் :