தொடர்புடைய செய்திகள்
- கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!
- பும்ரா எந்தந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்?… கம்பீர் கொடுத்த பதில்!
- கேப்டன்சியில் என் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்… ஆனால்?- புதுக் கேப்டன் ஷுப்மன் கில்!
- இந்தியா இங்கிலாந்து தொடருக்கு ‘டெண்டுல்கர்-ஆண்டர்சன்’ கோப்பை எனப் பெயர் மாற்றம்?
- நான் தேர்வாளர் இல்லை… ஸ்ரேயாஸ் ஐயர் குறித்தக் கேள்விக்கு கம்பீர் காட்டமான பதில்!
சச்சினுடன் என் பெயரும் சேர்ந்திருப்பது வாழ்நாள் கௌரவம்… ஆண்டர்சன் நெகிழ்ச்சி!
இந்திய அணி இம்மாதம் இங்கிலாந்தில் நடைபெறும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடருக்காக இளம் இந்திய அணி இங்கிலாந்து சென்று அங்கு பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. வழக்கமாக இந்திய அணி இங்கிலாந்து செல்லும் தொடருக்கு பட்டோடிக் கோப்பை என்று பெயர் வைக்கப்படும்.
ஆனால் தற்போது அந்த தொடருக்கு டெண்டுல்கர்- ஆண்டர்சன் கோப்பை என்று பெயர் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு நாட்டைச் சேர்ந்த இரு ஜாம்பவான்களையும் கௌரவிக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுபற்றி பேசியுள்ள ஆண்டர்சன் சச்சின் பெயருடன் தன் பெயரும் சேர்ந்திருப்பது கௌரவமானது எனக் கூறியுள்ளார்.
அதில் “நான் வளரும் காலங்களில் சச்சினின் பேட்ஸ்மேனாக பார்த்துதான் வளர்ந்தேன். கிரிக்கெட்டின் லெஜண்ட்டாகதான் நான் அவரைப் பார்த்து வருகிறேன். அவருடன் நான் நிறைய போட்டிகளில் ஆடியிருக்கிறேன். எனவே அவர் பெயருடன் என் பெயரும் சேர்ந்து கோப்பைக்குப் பெயர் வைக்கப்பட்டிருப்பது எனக்குக் கௌரவம்.” எனக் கூறியுள்ளார்.