இனிமேல் கடனுக்கு டிக்கெட் இல்லை...ஏர் இந்தியா அதிரடி !
இந்தியாவில் புகழ்பெற்ற பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா சமீப காலமாக நிதி நெறுக்கடியில் சிக்கி தவித்து வருதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், நிலுவை தொகை வைத்துள்ள அரசு நிறுவனங்களுக்கு இனி கடனுக்கு டிக்கெட் கொடுப்பதில்லை என தெரிவித்துள்ளது.
அரசுத் துறைகள் பல கோடிக்கணக்கான ரூபாய் அளவுக்கு ஏர் இந்தியாவுக்கு கடன் பாக்கி இருப்பதும்,இந்த நிறுவனத்தின் நலிவடையக் காரணம் என பேச்சு எழுகிறது.
இந்நிலையில், ரூ. 10 லட்சம் அளவுக்கு கடன் பாக்கி வைத்துள்ள சிபிஐ, அமலாக்கத்துறை, சுங்க இலாகா, மற்றும் பி.எஸ்.எப் மற்றும் ராணுவ கட்டுப்பாட்டுத் துறை உள்ளிட்டவற்றிற்கு இனி கடனுக்கு டிக்கெட் வழக்கப் போவதில்லை என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.