தோனிக்கு மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு இருக்கிறதா ? சேவாக் பரபரப்பு கருத்து !

Last Modified வெள்ளி, 20 மார்ச் 2020 (15:04 IST)

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி மீண்டும் இந்திய அணியில் விளையாடுவதற்கு வாய்ப்பு இல்லை என்று சேவாக் தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பைக்குப் பின்
சர்வதேசக் கிரிக்கெட்டில் விளையாடாமல் இருக்கும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி மீண்டும் அணியில் இடம் பிடிக்க வேண்டுமென்றால் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவது மட்டுமே ஒரே வாய்ப்பு என சொல்லப்பட்டது. இதை முன்னாள் வீரர் கபில்தேவ் மற்றும் இந்திய அணியின் பயிற்சியாளர் கபில்தேவ் உள்ளிட்டவர்கள் கூறி வருகின்றனர்.

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடப்பது சந்தேகமாகியுள்ளது. மேலும் நடந்து அதில் சிறப்பாக அவர் விளையாடினாலும் அணியில் இடம் கிடைப்பது சந்தேகம்தான் என முன்னாள் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார். ஏனென்றால் ‘ரிஷப் பண்ட் மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்’ எனக் கூறியுள்ளார். இந்த கருத்து தோனி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் அளித்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :