1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 7 அக்டோபர் 2021 (10:43 IST)

வார்னர்தான் ஓபனர்… ஆஸி கேப்டன் அறிவிப்பு!

விரைவில் தொடங்க டி 20 உலகக்கோப்பை தொடரில் ஆஸி அணிக்கு வார்னர்தான் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க உள்ளதாக ஆரோன் பின்ச் அறிவித்துள்ளார்.

ஆஸி அணியின் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் சமீபகாலமாக மோசமான ஆட்டத்திறனால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இப்போது அவர் காயத்திலிருந்தும் மீண்டும் பயிற்சி எடுத்து வருகிறார். இதையடுத்து டி 20 உலகக்கோப்பையில் அவர் தொடக்க வீரராக களமிறக்கப்படுவார் என ஆரோன் பின்ச் அறிவித்துள்ளார்.

இது சம்மந்தமாக அவர் ‘டேவிட் வார்னர் மிகச்சிறந்த வீரர். அவர் தயாரிப்பின் மேல் எனக்கு நம்பிக்கை உள்ளது. டி 20 உலகக்கோப்பை தொடரில் நானும் அவரும்தான் தொடக்க வீரர்களாக களமிறங்குவோம்’ எனக் கூறியுள்ளார். கடந்த ஒரு வருடமாக வார்னர் டி 20 போட்டிகளில் ஆஸி அணிக்காக விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.