1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (11:15 IST)

டி 20 உலகக்கோப்பை இறுதிப் போட்டி – 25000 பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்க கோரிக்கை!

டி 20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் ஐக்கிய அரபுகள் அமீரகத்தில் நடக்க உள்ளது.

ஐக்கிய அரபுகள் நாடுகளில் கடந்த ஆண்டே நடக்க வேண்டிய டி 20 உலகக்கோப்பை தொடர் நடக்க உள்ளது. அதில் பங்கேற்கும் அணிகளின் வீரர்கள் பட்டியல் வெளியாகி வருகிறது. அந்த வகையில் இலங்கை அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த போட்டிகள் நடக்கும் மூன்று மைதானங்களிலும் கொரோனா தொற்றை அடிப்படையாகக் கொண்டே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். துபாயில் நடக்கும் இறுதி போட்டியைக் காண குறைந்தது 20000 பார்வையாளர்களையாவது அனுமதிக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் வாரியம் ஐக்கிய அரபுகள் அமீரகத்துக்கு கோரிக்கை வைத்துள்ளது.