செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By mahendran
Last Updated : புதன், 15 செப்டம்பர் 2021 (17:21 IST)

டி 20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவை வெல்வது எளிதல்ல… மேக்ஸ்வெல் நம்பிக்கை!

விரைவில் தொடங்க உள்ள டி 20 உலகக்கோப்பை தொடர் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஒன்றாக உள்ளது.

ஐபிஎல் போட்டித் தொடர் முடிந்ததும் ஓமன் மற்றும் துபாயில் டி 20 உலகக்கோப்பைத் தொடர் தொடங்க உள்ளது. இதற்காக எல்லா நாட்டு அணிகளும் வீரர்களை அறிவித்து விட்டனர். இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிளன் மேக்ஸ்வெல் ஆஸ்திரேலியாவுக்குக் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் ‘எங்கள் அணியில் இருக்கும் வீரர்கள் அனைவரும் மேட்ச் வின்னர்கள். எங்களுக்கு கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு அதிகம். எங்களை வெல்வது மற்ற அணிகளுக்கு எளிதல்ல’ எனக் கூறியுள்ளார்.