புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 11 ஏப்ரல் 2020 (09:29 IST)

வீரர்களின் சம்பளப் பாக்கி – பிசிசிஐ அதிரடி முடிவு !

இந்திய கிரிக்கெட் வாரியம் ஒப்பந்த வீரர்களுக்கான சம்பளப் பாக்கியை மொத்தமாக அளித்துள்ளது.

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் இந்தியாவில் நடைபெற இருந்த பிரபல ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது. மேலும் பல சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மற்ற நாடுகளில் கொரோனா பாதிப்பு தொடரும் பட்சத்தில் சில போட்டிகள் ரத்து செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்க தலைவர் அசோக் மல்கோத்ரா ”கொரோனா பாதிப்பால் பல்வேறு கிரிக்கெட் போட்டிகளும் ரத்தாகி இருப்பதால் கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்தை குறைக்க வேண்டும்” என கருத்து தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அதுபற்றி எதுவும் அறிவிக்காத பிசிசிஐ இப்போது ஒப்பந்த வீரர்கள் அனைவரின் சம்பளத்தையும் மொத்தமாகக் கொடுத்துள்ளது.

இது சம்மந்தமாக ‘நெருக்கடியான இந்த சமயத்தில் எந்த ஒரு வீரரும் அவதிப்பட விடமாட்டோம்’ தங்கள் சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளது.