வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 9 ஏப்ரல் 2020 (22:07 IST)

ஐபிஎல் போட்டி நடைபெறா விடில் பிசிசிஐக்கு ரூ.3,800 கோடி இழப்பு !

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி நடக்க இருந்த ஐபிஎல் போட்டி ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்நிலையில் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் , அனைத்து மாநில முதல்வர்களும் ஊரடங்கு காலத்தை நீட்டிக்க கோரிக்கை விடுத்துள்ள நேற்று பிரதமர்  மோடி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஏப்ரல் மாதம் முழுவதும் இந்த ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஐபிஎல் தொடர் இப்போதைக்கு நடத்தப்படாது என்றே பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

ஒருவேளை இத்தொடர் நடைபெறாமல் போனால் பிசிசிஐ மற்றும் ஐபில் பங்குதாரர்களுக்கு சுமார் ரூ.3800 கோடி இழப்பு ஏற்படுமென செய்திகள் வெளியாகிறது. அதில், ஸ்பான்சர் பெற்றவர்களுக்கு கூடுதலாக இழப்பு ஏற்படும் என இவ்வாறாக மொத்தம் ரூ.3869.50 கோடி இழப்பு ஏற்படும் எனவும், ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்பட்டால் அதற்கு இன்சூரன்ஸ் செய்த தொகை கிடைக்காது என கூறப்பட்டுள்ளது.

மேலும் போட்டி நடைபெறுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னர்தான் விளையாட்டு வீரர்களுக்கு 15% சம்பளம் வழங்கப்படும் நிலையில், பின்னர் தான் 65% சம்பளம் வழங்கப்படும் , இந்த நிலையில், தற்போது நடைபெற இருந்த போட்டிக்கு வீரர்களுக்கு  சம்பளம் வழங்கப்படவில்லை.