கொரோனா நிதிக்காக...இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் ? சோயிப் அக்தர் யோசனை!

akthar
Sinoj| Last Modified புதன், 8 ஏப்ரல் 2020 (18:56 IST)

மத்திய சுகாதாரத்துறை, நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.

அதில், புதிதாக 773 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியாகியுள்ளதாகவும், இதுவரை
மொத்தமாக 5274
பேராக பாதிப்பட்ட்டுள்ளனர் எனவும், பலி எண்ணிக்கை 149 அதிகரித்துள்ள்ளது எனவும் 411 பேர் மீண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு உள்ள நிலையில், அரசு பல்வேறு நவவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதில், ஏழை, எளிய மக்களுக்கு அரசும், சமூக சேவை நிறுவங்களும் விளையாட்டு நட்சத்திரங்கள், சினிமா நடிகைகள் நடிகைகள் எனப் பலரும் தொடர்ந்து
பிரதமர் மற்றும் மாநில முதல்வர்களில் நிவாரணக்கு உதவி செய்துவருகின்றனர்.

அதேபோல் அண்டை நாடான பாகிஸ்தனிலும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த நாட்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில், பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் சோகைப் அக்தர் ஒரு யோசனை தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது :


கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கிடையே ஒரு நாள் கிரிக்கெட் தொடரை நடத்தி நிதி திரட்டலாம் என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே அண்டைநாடான பாகிஸ்தான் காஷ்மீரின் 370 வது சிறப்புப் பிரிவை நீக்கியதற்காக பல்வேறு விமர்சனங்களை தெரிவித்துவருகிறது.

மேலும், கொரோனா தொற்றினால் பலரும் பாதிக்கப்பட்டுவரும் நிலையில், ஐபில் தொடரையே அரசு நிறுத்திவைத்துள்ளதால், அக்தரின் யோசனை ஏற்கப்படுமா என நெட்டிசன்கள் விவாதித்து வருகின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :