1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. Bangalore won and get third place in point table

ஒரே ஒரு வெற்றியால் 3வது இடத்திற்கு முன்னேறிய பெங்களூரு: சென்னைக்கு எந்த இடம்?

ஐபிஎல்
ஒரே ஒரு வெற்றியால் 3வது இடத்திற்கு முன்னேறிய பெங்களூரு
ஐபிஎல் போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இதுவரை மொத்தம் 10 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன
 
இந்த நிலையில் 10 போட்டிகளில் முடிந்த பின்னர் அணிகளின் புள்ளிப்பட்டியல் குறித்த தகவல்கள் தற்போது பார்ப்போம் 
 
கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகளில் சுமாராக விளையாடி வந்த டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகள் தான் இந்த ஆண்டு அபாரமாக விளையாடி 100 சதவீத வெற்றியை பெற்றுள்ளது. இந்த இரு அணிகளும் இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்று தலா 4 புள்ளிகள் பெற்றுள்ளது. இருப்பினும் ரன்ரேட் அடிப்படையில் டெல்லி முதலிடத்திலும் இராஜஸ்தான் இரண்டாவது இடத்திலும் உள்ளது
 
நேற்றைய சூப்பர் ஓவரில் அபாரமாக வெற்றி பெற்ற பெங்களூரு அணியின் அதே நான்கு புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது.
 
பஞ்சாப் அணி நான்காவது இடத்திலும் மும்பை அணி 5வது இடத்திலும் கொல்கத்தா 6-வது இடத்திலும் உள்ளன, சென்னை அணி இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்று உள்ளதை அடுத்து அந்த அணி 7வது இடத்தில் உள்ளது. அதேபோல் ஹைதராபாத் அணி இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டிலும் தோல்வி அடைந்துள்ளதால் கடைசி இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
கிறிஸ் கெயில் சாதனையை சமன் செய்த பெங்களூரு வீரர்! பரபரப்பு தகவல்