தொடர்புடைய செய்திகள்
- தமிழக முதல்வரின் வாழ்த்துக்கு நன்றி கூறிய அஸ்வின் ரவிச்சந்திரன்!
- அஸ்வினால் மட்டுமே என் சாதனையை முறியடிக்க முடியும் – முரளிதரன் கருத்து!
- விஹாரியை விமர்சித்த பாஜக அமைச்சர்...அஸ்வின் பதிலடி
- நீ ஒரு லெஜண்ட் மச்சி… அஸ்வினைப் பாராட்டிய தமிழ் நடிகர்!
- ஹனும விஹாரி - அஷ்வின்: "கவலைப்படாம ஆடு மாமா" தமிழில் களமாடிய வீரர்கள்
சாதிய இழிவுவார்த்தையை பேசினாரா அஸ்வின் – வெடித்தது அடுத்த சர்ச்சை!
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு உரையாடலின் போது பேசிய வார்த்தை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியின் சுழல்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸி தொடரின் வெற்றிக்குப் பின்னர் இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளரோடு ஒரு உரையாடலை நடத்தினார். அப்போது டெஸ்ட் தொடர் முழுவதும் நடந்த சுவாரஸ்யமான விஷயங்களை இருவரும் பகிர்ந்துகொண்டனர்.
சிட்னி டெஸ்ட்டில் ஹனுமா விஹாரியுடன் அமைத்த பார்ட்னர்ஷிப் பற்றியும் ஆஸி வீரர்களின் பவுலிங் தாக்குதல் குறித்தும் பேசிய அவர்கள், ஆஸி பந்துவீச்சாளரைப் பற்றி பேசும் போது ஒரு வார்த்தையை குறிப்பிட்டனர். அது ஒரு குறிப்பிட்ட சாதியினரை இழிவுபடுத்துவதாக சமூகவலைதளங்களில் மிகப்பெரிய கண்டனம் எழுந்துள்ளது.
