விஹாரியை விமர்சித்த பாஜக அமைச்சர்...அஸ்வின் பதிலடி

ashwin wicket
Sinoj| Last Modified புதன், 13 ஜனவரி 2021 (21:56 IST)


சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டிரா செய்தது. இதற்கு அஸ்வின் மற்றும் விஹாரியின் பங்கு மகத்தானது. களத்தில் அன்று 131 ஓவர்கள் விளையாடி டிரா செய்தனர். எனவே
பல்வேறு பிரபலங்கள் அவர்களுக்குப் பாராட்டுகள் தெரிவித்தனர்.


இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடந்து முடிந்துது. பரபரப்பான ஆட்டத்தில் நின்று விளையாடிய அஸ்வின் – விஹாரி கூட்டணி விக்கெட் இழக்காமல் தொடர்ந்து ஆட்டத்தை இழுத்து சென்று ட்ரா ஆக்கினர். முன்னதாக விளையாடிய ரிஷப் பண்ட் சிறப்பாக விளையாடிய போதிலும் 97 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அப்போது அவர் அவுட் ஆகவில்லை என்றால் இந்தியா வென்றிருக்கும் என்றும் சிலர் பேசி வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய வீரர் விஹாரியாஇ மத்திய இணை அமைச்சர் பபுல் சுப்ரியோ கடுமையான விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது : இந்திய அணியின் வெற்றியை விஹாரி களத்திலேயே கொலை செய்து புதைத்துவிட்டதாகத் தெரிவித்தார். மேலும் 7 ரன்களுக்கான 109 பந்துகளை வீணடித்த்து ரொம்ம மோசக்ம் என்று கூறியிருந்தார்

இதற்கு இந்திய வீரர் அஸ்வின் பதிலடி கொடுத்துள்ளார். அதில், இதைப்பார்த்து தான் தரையில் விழுந்து புரளுமளவு காமெடி என்று இணைய மொழியில் கூறியுள்ளார். இதற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
இதில் மேலும் படிக்கவும் :