1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 19 ஜனவரி 2021 (17:40 IST)

தமிழக முதல்வரின் வாழ்த்துக்கு நன்றி கூறிய அஸ்வின் ரவிச்சந்திரன்!

இந்திய கிரிக்கெட் அணி இன்று ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நடந்த நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் அபார வெற்றி பெற்றதை அடுத்து வாழ்த்துக்களை பெற்று வருகிறது. பிரதமர் மோடி, சச்சின் டெண்டுல்கர், சுந்தர் பிச்சை உள்பட பலர் வாழ்த்து தெரிவித்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆகியோரும் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்தனர் 
 
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்திய அணியின் வரலாற்று சிறப்பு வாய்ந்த வெற்றி குறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: பல நட்சத்திர வீரர்கள் இல்லாத நிலையிலும் வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் தொடர் வெற்றியை பெற்ற  இந்திய அணிக்கு என் வாழ்த்துக்கள். இதில் நமது மூன்று தமிழக வீரர்களின் சிறப்பான பங்களிப்பு பெரும் மகிழ்ச்சியை தருகிறது
 
தமிழக முதல்வரின் இந்த வாழ்த்து ட்விட்டருக்கு பதிலளித்த இந்திய அணியின் முக்கிய பந்து வீச்சாளர்களில் ஒருவரான அஸ்வின் ரவிசந்திரன் தனது டுவிட்டரில் நன்றி தெரிவித்து கூறியதாவது: நன்றிகள் பல, ஐயா. என் கிரிக்கெட் பயணத்தில் தலைச்சிறந்த வெற்றி ஆக இதை கருதுகிறேன். நம் தமிழ் மண்ணிலிருந்து மூன்று பேர் பங்கேற்றது எனக்கும் பெருமையை அளிக்கிறது. எனது வாழ்த்துக்கள் வாஷி & நட்டுக்கு