1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. Ashwin in Dindugul dragons team won tnpl

டிஎன்பிஎல் கிரிக்கெட்: அஸ்வினின் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வெற்றி..!

டிஎன்பிஎல்
கடந்த சில நாட்களாக டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இந்திய அணியின் முன்னணி பந்துச்சாளரான அஸ்வின், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியில் இணைந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
 
இதனை அடுத்து அவருடைய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி நேற்றைய போட்டியில் அபார வெற்றி பெற்றது. நேற்று நடந்த போட்டியில் திருச்சி மற்றும் திண்டுக்கல் அணிகள் மோதின
 
கோவையில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திருச்சி அணி 120 ரன்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து ஆட்டம் இழந்தது. இதனை அடுத்து 121 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 14.5 ஓவர் களிலேயே 122 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 
 
நேற்றைய போட்டியில் அஸ்வின் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
லன்கா பிரீமியர் லீக் ஏலத்தில் அறிவிக்கப்படாத சுரேஷ் ரெய்னா பெயர்… பின்னணி என்ன?