1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. ICC Test Rankings Top 3 Aussies Players

ஐசிசி டெஸ்ட் தரவரிசை – முதல் 3 இடங்களை பிடித்து ஆஸ்., வீரர்கள் சாதனை

Marence Lapuzanne
சில நாட்களுக்கு முன் உலகக் கோப்பை டெஸ்ட் சேம்பியன் இறுதிப் போட்டி  லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில், ஆஸ்திரேலியா அணியின் டிராவிஸ் ஹெட் முதல் இன்னிங்ஸில் சதம் அடித்து, 163 ரன்களும், 2 வது இன்னிங்ஸ்கில் 18 ரன்னும் அடித்த நிலையில், சிறந்த வீரர்கள் பட்டியலில் 3 வது இடம் பிடித்துள்ளார்.

இப்போட்டியில், முதல் இன்னிங்ஸில் சதம் அடித்த ஸ்மித் 885 புள்ளிகளுடன் தரவரிசைப்பட்டியலில் 2 வது இடம் பிடித்துள்ளார்.

அதேபோல், ஆஸ்திரேலியா வீரர் மாரன்ஸ் லபுசேன் 903 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்துள்ளார்.

எனவே 39 ஆண்டுகளுக்குப் பின் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஒரே அணியைச் சேர்ந்த 3 பேட்ஸ்மேன்கள் இப்படியலில் முதல்  மூன்று இடங்களைப் பிடித்து சாதனை படைத்துள்ளனர். இவர்களுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
அடுத்த கட்டுரையில்
திண்டுக்கல் ட்ராகன்ஸில் இணையும் அஸ்வின்! – கலகலக்க போகும் டிஎன்பிஎல் போட்டிகள்!