வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 13 ஜூன் 2023 (07:30 IST)

சிவகார்த்திகேயன் & அதிதி ஷங்கர் இணைந்து பாடிய பாடல்… மாவீரன் படத்தின் செகண்ட் சிங்கிள் அப்டேட்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் மண்டேலா புகழ் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கி வரும் திரைப்படம் மாவீரன். இந்த படத்தில் நாயகியாக அதிதி ஷங்கர் நடிக்க, வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடிக்கிறார். அருண் விஷவா தயாரிக்க மண்டேலா படத்துக்கு இசையமைத்த பரத் ஷங்கர் இசையமைக்கிறார்.

படத்தின் ஷூட்டிங் முடிந்து இப்போது பின் தயாரிப்பு வேலைகள் நடந்து வருகின்றன. படம் ஜூலை மாதத்தில் ரிலீஸ் ஆக வுள்ள நிலையில் இப்போது படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல் ரிலீஸ் அப்டேட் வெளியாகியுள்ளது.

யுகபாரதி வரிகளில் உருவாகியுள்ள ‘வண்ணார பேட்டையில’ என்ற பாடல் ஜூன் 14 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலை சிவகார்த்திகேயன் மற்றும் அதிதி ஷங்கர் இருவரும் இணைந்து பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.