டிஎன்பிஎல் இன்று தொடக்கம் … திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கு 180 ரன்கள் வெற்றி இலக்கு
தமிழ்நாட்டில் நடைபெறும் புகழ்பெற்ற டி.என்.பி.எல் எனப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.
இந்த2023 ஆண்டிற்கான 7 வது சீசன் இன்று கோவையில் தொடங்கியது.
முதல் போட்டியில், கோவை கிங்ஸ் அணி திருப்பூர் தமிழன்ஸ் அணியுடன் மோதி வருகிறது.
இன்றைய போட்டியில், டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. எனவே முதலில் பேட்டிங் செய்த கோவை கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் அடித்து, திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கு 180 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்த அணி சார்பில், சுதர்சர் 86 ரன்னும், முகிலேஷ் 33 ரன்னும், அடித்தனர். திருப்பூர் அணி தரப்பில், விஜய் 3 விக்கெட்டும் சாய் கிஷோர் 2 விக்கெட் கைப்பற்றினர்.