வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. கட்டுரைகள்
Written By Webdunia
Last Updated : செவ்வாய், 7 மார்ச் 2023 (21:15 IST)

வித்தியாசமாக ஹோலி பண்டிகை கொண்டாடிய இந்திய அணி! வைரலாகும் வீடியோ

india cricket team
இந்திய கிரிக்கெட் அணியினர் ஹோலி பண்டிகை கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வடஇந்தியாவில் மக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஹோலிப் பண்டிகை. இதையொட்டி, அரசுவிடுமுறை விடப்பட்டுள்ளதால், மக்கள் அனைவரும், வண்ணப்பொடிகளை தூவி கொண்டாடுவர்.

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணி வீரர்களும் ஹோலி பண்டிகையை கொண்டாடியுள்ளனர்.

தற்போது, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒரு நாள், டி-20 தொடர்களில் விளையாடி வருகிறது.

ஏற்கனவே முடிந்த 3 டெஸ்டுகளில் இந்திய அணி 2 போட்டியிலும், ஆஸ்திரேலியா 1 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.

இந்த நிலையில், கடைசிப் போட்டி வரும் 9 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் வெற்றி பெற்றால்தான் இந்திய அணி உலகடெஸ்ட் சேம்பியன் போட்டியில் இறுதிப் போட்டிக்கு முன்னேறமுடியும் என்பதால் இந்திய வீரர்கள் ஜெயிக்க வேண்டி தீவிர பயிற்சி செய்து வருகின்றனர்.

இந்த  நிலையில், இந்தியாவில் அனைத்துப் பகுதிகளில் ஹோலி கொண்டாடி வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணி வீரர்களும் பேருந்தில் செல்லும்போது,விராட் கோலி  சுப்மன் கில் உள்ளிட்ட வீரர்கள்  ஒருவர் மீது ஒருவர் கலர்பொடிகளை வீசி ஹோலி பண்டிகை கொண்டாடினர்.

இந்த வீடியோ வைரலாகி வருகிறது.